தொடர் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. 83,000க்கும் அதிகமாக சென்ற சென்செக்ஸ்..!

Siva

வியாழன், 18 செப்டம்பர் 2025 (11:17 IST)
கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தை, தற்போது தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. அமெரிக்கா, இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50% வரி விதித்திருந்த போதிலும், இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருப்பதால் சந்தை நேர்மறையாகச் செல்கிறது.
 
இந்த நிலையின் காரணமாக, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து, 83,043 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து, 25,248 என்ற புள்ளிகளை எட்டியுள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில், பல முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும், சில நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் காணப்படுகின்றன.
 
 இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சன்பார்மா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதே நேரத்தில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்