உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மொபைல் போன் இல்லாதவர்களை காண்பது அரிதாகிவிட்டது. இந்த நிலையை மாற்றும் வகையில், மெட்டா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், இந்த கண்டுபிடிப்பு அறிவியலில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 12 மெகாபிக்சல் கேமரா, மேப் வசதி, புகைப்படங்களை பார்க்கும் அம்சம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் வசதி என அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பயனர்கள் தங்கள் கைகளில் ஸ்மார்ட்போனை வைத்திருக்க வேண்டிய அவசியம் குறைந்துவிடும்.
இந்த AI கண்ணாடியின் இந்திய மதிப்பு சுமார் ₹70,300 ஆகும். இது செப்டம்பர் 30 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக இருக்குமா அல்லது கூடுதல் சாதனமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.