கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran

செவ்வாய், 9 ஜூலை 2024 (12:31 IST)
அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட முடியாது என  திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் அமைக்கும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
 
ஆம்னி பஸ் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த உத்தரவை எதிர்த்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த வழக்கு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆம்னி பேருந்துகளை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே வழக்கம்போல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் கிளம்பும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்