கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை வேண்டும்:.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

Mahendran
வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:56 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து கலைக் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இதற்காக 8 கோடி 55 லட்சம் ரூபாய் தமிழக அரசு இன்னும் மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சானிடரி நாப்கின் எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடந்த நிலையில், இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் தமிழ்நாடு முழுவதும் கலைக் கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசு இதற்காக 8 கோடி 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணையும் பிறப்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்