தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மது விற்பனையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இரண்டு நாட்களிலேயே மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் மதுவை ஆன்லைனில் வாங்கும்படி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. அபராத தொகையை முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.