எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குக்கு தடை விதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:22 IST)
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எதிரான வழக்குகளை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஆர் எஸ் பாரதி உள்பட ஒருசிலர் பதிவு செய்த  வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் எஸ் பி வேலுமணி எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட முடியாது என்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வேலுமணி தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் இந்த மனு மீதான தீர்ப்பில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்