சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

புதன், 15 பிப்ரவரி 2023 (22:09 IST)
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தினம் தோறும் விசாரித்து விரைவில் முடிக்க வேண்டும் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பாஜக பாஜக பிரமுகர் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் லால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
 
இது குறித்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆனபோதிலும் இன்னும் இந்த வழக்கு முடியாததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இந்த உத்தரவில் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்