வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை: ஆனால்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:07 IST)
கோவையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என்றும் கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கோவை மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
 
மேலும் கோவை மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதி தீர்ப்பு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்