மாணவிகள் தற்கொலையில் அரசியல் ஆதாயம்: கட்சி தலைவர்களுக்கு நீதிபதி கண்டனம்

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (23:50 IST)
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே ஏதாவது ஒரு துக்க நிகழ்வு ஏற்பட்டுவிட்டால் அதை வைத்து அரசியல் செய்வது என்பது அரசியல் கட்சி தலைவர்களின் வழக்கமாக உள்ளது. இதற்கு உதாரணமாக நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் தற்கொலைகளை கூறலாம்.
 
தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுவது போல் செல்லும் அரசியல் தலைவரக்ள் அந்த தற்கொலையை தங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் கருத்து கூறிய சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், 'மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்க முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பின்னர் கண்ணீர் வடிக்கிறார்கள், மாணவர்கள் தற்கொலை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
நீதிபதியின் இந்த கண்டனத்தை அடுத்தாவது அரசியல்வாதிகள் திருந்துவார்களா? என்று பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்