சென்னை எலெக்ட்ரிக் ரயில்களில் ஏசி பெட்டி! – பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (10:17 IST)
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டி பொருத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



சென்னையின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ஒன்று சென்னை புறநகர் மின்சார ரயில்கள். சென்னை கடற்கரை தொடங்கி தாம்பரம், செங்கல்பட்டு வரையிலும், செண்ட்ரல் தொடங்கி திருவள்ளூர், திருப்பதி வரையிலும் விரியும் மின்சார சேவைகளை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் சோதனை முயற்சியாக ஏசி பெட்டிகள் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே சோதனை முயற்சியாக 2 – 3 ஏசி பெட்டிகளை இணைக்க உள்ளதாகவும், 6 மாதங்களுக்கு பின்னர் இதன் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்