இந்த நிலையில், ஏற்கனவே ' அக்டோபர் 2 ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்'' , ''சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை கெளரவப் படுத்த வேண்டும்'' என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டிருந்தார்.
இதுபற்றி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் சமூக வலைதள பக்கத்தில்,
தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க, தேசத் தந்தை #மகாத்மாகாந்தி அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு.!
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், வட்டம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.