சென்னையில் மாரத்தான் போட்டி.. இன்று போக்குவரத்தில் திடீர் மாற்றம்..!

திங்கள், 2 அக்டோபர் 2023 (07:51 IST)
சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற இருப்பதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாரத்தான் போட்டி நடைபெறுவதை அடுத்து மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மீஞ்சூரில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலையில் வண்டலூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் செங்குன்றம் ஆர்டிஓ பாலம் சேவை சாலை வழியாக திருப்பி விடப்பட்டு புழல் - தாம்பரம் உள்பட்ட சாலை வழியாக வண்டலூர் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
அதேபோல் திருவள்ளூர் நெடுஞ்சாலையிலிருந்து வரும் கனரக வாத வாகனங்கள் காந்திநகர் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு 400 அடி வெளிவட்ட சாலை வழியாக மீஞ்சூர் அல்லது ஜிஎன்டி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு புழல் - தாம்பரம் உள்பட்ட சாலை வழியாக செல்லலாம்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்