தொடங்கியாச்சு சுற்றுலா சீசன்.. 217 சிறப்பு ரயில்கள் தயார்! – ரயில்வே மகிழ்ச்சி அறிவிப்பு!

புதன், 12 ஏப்ரல் 2023 (09:26 IST)
பள்ளி விடுமுறைகள் காரணமாக நாடு முழுவதும் சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் குறித்து ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணங்கள் களைக்கட்டும் மாதங்களாக உள்ளது. பள்ளிகளிலும் தேர்வுகள் முடிந்து மாணவர்கள் விடுமுறையில் இருப்பார்கள் என்பதால் மக்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா செல்வதற்கு தயாராகி வருகின்றனர். முக்கியமான சுற்றுலா தளங்கள் பலவற்றில் விடுதிகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுற்றுலா பயணங்களை ஊக்குவிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் 217 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் 20 சிறப்பு ரயில்களும், தென்மத்திய ரயில்வேயில் 48 சிறப்பு ரயில்களும், தென்மேற்கு ரயில்வேயில் 69 ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

ரயில்களில் மொத்தமாக இருக்கையை முடக்கி வைத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், ப்ரோக்கர் இடையூறுகளை தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்