சென்னை நகரை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு அதிரடி திட்டங்களை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் குப்பையை அகற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மாநகராட்சி நவீன முறையில் குப்பைகளை அகற்றும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது
மேலும் கண்காணிப்பு குழு அமைக்க உள்ளதாகவும், திடக்கழிவு மேலாண்மை முயற்சிகளுக்கு மக்கள் மற்றும் வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது
சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்றும் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் இடங்கள் கண்டறிந்து அவ்வாறு குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
சென்னை நகரை குப்பையில்லா நகரமாக மாற்ற பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.