சென்னை சாலைகளில் இனி பள்ளம் தோண்ட கூடாது: மாநகராட்சி அதிரடி தடை

Webdunia
திங்கள், 1 மே 2023 (15:56 IST)
சென்னை சாலைகளில் இனிமேல் பள்ளம் தோண்ட கூடாது என மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் 49.32 கோடி செலவில் சாலைகள் சிகரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும் 382 உள் சாலைகள் சாலைகளை சீரமைக்க 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை சாலைகளில் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பணி நிமித்தமாக பள்ளம் தோண்டுவதாக புகார்கள் வந்துள்ளது. புதிதாக போடப்படும் தார் சாலைகளில் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு அரசு அல்லது தனியார் நிறுவனம் பள்ளம் தோண்ட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
சென்னை மாநகர குடிநீர் வாரியம், சென்னை மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்