சென்னையில் இரண்டு நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் பணிபுரியும் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அப்பகுதிகளுக்கு பயணிகள் சிரமமின்றி செல்ல சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 230 கூடுதல் பேருந்துகளை இன்றும், நாளையும் சென்னைக்குள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்