சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்னாக்ஸ் வழங்கப்படும் என்றும் மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறை கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிலிருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்
மேலும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜேஈஈ, நீட் போன்ற போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதுத்தையும் மாநகராட்சியை செலுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.