சென்னை சென்ட்ரலில் இருந்து 2 புதிய மின்சார ரயில்.. எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

Siva

ஞாயிறு, 2 மார்ச் 2025 (07:53 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாளை முதல் 2 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து ஏற்கனவே செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் பயன் அளிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு பகுதிகளுக்கு புதிதாக இரண்டு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே ஒட்டகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5:25 மணிக்கு ஒரு மின்சார ரயில் புதிதாக இயக்கப்படும்.

மறு மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11:15 மணிக்கு ஒரு புதிய ரயில் இயக்கப்படும்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 9:10 மணிக்கு ஒரு புதிய ரயில் இயக்கப்படும்.

மறு மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10:35 மணிக்கு ஒரு புதிய ரயில் இயக்கப்படும்.

இந்த புதிய மின்சார ரயில்களை பயணிகள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்