டிசம்பரிலேயே தொடங்கும் சென்னை புத்தக கண்காட்சி! எழுத்தாளர்களுக்கு பொற்கிழி! - விரிவான தகவல்கள்!

Prasanth Karthick
திங்கள், 9 டிசம்பர் 2024 (11:37 IST)

தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக கண்காட்சியான சென்னை புத்தக கண்காட்சி குறித்த அறிவிப்பை பபாசி வெளியிட்டுள்ளது.

 

 

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆண்டு முழுவதும் புத்தக கண்காட்சிகள் நடைபெறுகின்றன. எனினும் ஜனவரியில் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி பெருமளவிலான வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டில் சென்னை புத்தக கண்காட்சி 800+ ஸ்டால்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி டிசம்பர் இறுதியில் தொடங்குகிறது. இதுகுறித்து பபாசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

இந்த புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விழாவின் துவக்க நிகழ்ச்சியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

 

இந்த புத்தக கண்காட்சியில் 900 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து புத்தகங்களும் 10 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தக கண்காட்சி செயல்படும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்