கடந்த 1996-ஆம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. தினகரன் மீது தொடரப்பட்ட இந்த அந்நிய செலாவணி மோசடி வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் இது போன்ற வழக்கு தொடர்ந்தால் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது நீதிமன்றம்.