கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் வெளியேறும் இரசாயன நுரை...விவசாயிகள் அதிர்ச்சி.
வெள்ளி, 13 மே 2022 (23:26 IST)
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் குவியல் குவியலாக வெளியேறும் இரசாயன நுரையால் விவசாயிகள் அதிர்ச்சி.
தென்பெண்ணை ஆறு உற்ப்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கணிசமாக நீர் அதிகரித்துள்ளது
கர்நாடகா மாநில ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுகள், ஆற்றில் நீர் அதிகரிக்கும் பொழுது அவற்றில் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில்
தென்பெண்ணை ஆறு தமிழகத்தின் கொடியாளம் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு வந்தடைந்து, நீர் சேமிக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது
தற்போது கெலவரப்பள்ளி அணையில் வெளியேற்றப்படும் நீரில் அதிகப்படியான ரசாயான கழிவுகளால் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுகிறது
2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக - கர்நாடகா பசுமை தீர்ப்பாயம் கூட்டாக நீரை ஆய்வு செய்தநிலையில் இன்று வரை முடிவுகள் தெரிவிக்கப்படாத சூழலில்
ரசாயன கழிவுகளால் பொங்கி காணப்படும் நுரைகளால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.. அதிகாரிகள் தெளிவுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்
கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடிகளில் 39.95 அடிகள் சேமிக்கப்பட்டு வரத்தாக உள்ள 480 கனஅடிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது