முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை விசாரணை செய்ய ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ள நிலையில், மேல் விசாரணை செய்ய ஆளுநர் ஒப்புதல் வேண்டும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், நேற்று ஆளுநர் இந்த வழக்கை விசாரணை செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து இந்த வழக்கு விறுவிறுப்பாக விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பில் ராஜேந்திர பாலாஜி தண்டிக்கப்படுவாரா அல்லது விடுதலை செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva