பிரதமர் மோடி தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை சந்தித்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளார் . இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்துள்ளனர் .பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டு ஆட்சி காலத்தில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை .
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 6000 வழங்கி வருகிறார். ஆனால் தமிழக அரசு ஏழை மக்களுக்கு பொங்கல் இனாம் வழங்கி ஏமாற்றி வருகிறது . இந்தியா சீனாவை விட இரண்டு மடங்கு டிஜிட்டல் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது . காங்கிரஸ் கட்சியின் பல்வேறு விமர்சனங்களை தாண்டி மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வழங்கிய சீனாவுக்கு இந்தியா இலவச மருந்து மற்றும் உணவுப்பொருள் வழங்கியது .
மேலும் கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து 38 மாதங்கள் இலவச உணவு வழங்கி பொதுமக்களை காப்பாற்றி உள்ளார் . மத்திய அரசு சார்பில் விருதுநகரில் ரூபாய் 2000 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கியுள்ள ஜவுளி பூங்காவை திமுக தனது திட்டம் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டுக்காக ஜப்பான் சென்றுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் . இந்தியாவின் பெருமையை வெளிநாடுகளில் ராகுல் காந்தி தரக்குறைவாக பேசி விமர்சித்து வருவது கண்டிக்க தக்க செயலாகும் . புதிய பாராளுமன்ற கட்டிடத்தை 19 எதிர்கட்சிகள் புறக்கணித்தனர். அவர்கள் மறுபடியும் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு வாய்ப்பு கிடைக்காது. இந்திய அளவில் பாஜகவை எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் நிலைமை காமெடியன்கள் போன்று உள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 2000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அரசின் நலத்திட்டங்களால் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது . இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொது செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், ராஜ்குமார், துணைத்தலைவர் ஜெயவேல், இணை பொருளாளர் சத்தியம் செந்தில்குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இருந்தனர்..