திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்லை….அது ஒரு தனியார் நிறுவனம்- சுவேந்து அதிகாரி

செவ்வாய், 6 ஜூன் 2023 (19:44 IST)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்லை…அது ஒரு தனியார் நிறுவனம் என்று பாஜக நிர்வாகி சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி இரவில் ஒடிஷாவில் பாலசோரில்  கோரவிபத்து நடைபெற்றது. இந்த விபத்தில், 288  பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து நடைபெற்ற இடத்தை பிரதமர் மோடி,  ரயில்வேதுறை அமைச்சர் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வைவிட்டனர்.

இந்த விபத்து பற்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி,  இன்று கூறியதாவது:
‘’ஒடிஷா ரெயில் விபத்திற்கு பின்னணியில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், ஒடிஷா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களை  நேதாஜி உள்ளரங்க மைதானத்திற்கு  நாளை வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் முன்னிலையில், உரையாற்றி காயமடைந்த நபர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகள் வழங்குவார். இதற்காக அவர்களை கொல்கத்தா வரும்படி கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு தனியார் நிறுவனம். அதன் தலைவர் மம்தா பானர்ஜி, மேலாண் இயக்குனர் அபிசேக் பானர்ஜி  என்றும், அதன் உரிமையாளரை நான் தோற்கடித்துவிட்டேன் ‘’ என்று விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்