பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்க்கும் தேதி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 28 மே 2024 (13:04 IST)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனை அடுத்து பிப்ரவரி 19ஆம் தேதி தேர்வுக்கான வினா குறிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் 18 மற்றும் 22 தேதிகளில் வெளியிடப்பட்டன
 
இந்த நிலையில் தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
என்னென்ன சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை மே 30, 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சான்றிதழ் சரி பார்க்கும் நிகழ்வுக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கணக்கு பாடத்துக்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் மே 30, 31 ஆகிய தேதிகளிலும், தாவரவியல் பாடத்துக்கு விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விலங்கியல் பாடத்துக்கு சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புவியியல் படத்திற்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் 30-ஆம் தேதியிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்