முதலமைச்சருடன் மத்திய குழு ஆலோசனை.. ரூ.5060 கோடி தமிழகத்திற்கு கிடைக்குமா?

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (11:52 IST)
சென்னை தலைமைச் செயலகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை கடந்த 2 நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு செய்த நிலையில் ஆய்வுக்கு பின் தற்போது முதலமைச்சரை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு சந்தித்துள்ளனர்.
 
இந்த சந்திப்பின்போது இடைக்கால நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.5060 கோடி தமிழக அரசு கேட்டிருந்த நிலையில் மத்திய குழுவிடமும் முதல்வர் இதனை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
 
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஆய்வு முதல்வரின் சந்திப்புக்கு பின்னர் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என மத்திய குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்