'அவர்கள் வாழ்விலும் புதுமைகள் மலரட்டும்-அமைச்சர் உதயநிதி

புதன், 13 டிசம்பர் 2023 (13:36 IST)
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் வழியில், நம் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களும், ‘கான்கிரீட் கூரைக்கு கீழ் ஒரு வீடு’ எனும் விளிம்பு நிலை மக்களின் கனவை நனவாக்கி வருகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’சென்னை போன்ற மாநகரில் வசிப்போருக்கு சொந்த வீடு என்பது பெருங்கனவு. அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக 70-களிலேயே எண்ணற்ற திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தந்தார்கள். கலைஞர் அவர்கள் வழியில், நம் மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களும், ‘கான்கிரீட் கூரைக்கு கீழ் ஒரு வீடு’ எனும் விளிம்பு நிலை மக்களின் கனவை நனவாக்கி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக, நம்முடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி, எம்.ஏ சாகிப் தெரு & நாவலர் நெடுஞ்செழியன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் புதிய வீடுகளை வழங்குவதற்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை இன்று வழங்கினோம்.

வீடு கிடைத்த மகிழ்ச்சியை அன்பாகப் பொழிந்த தொகுதி மக்களுக்கு என் வாழ்த்துகள். புது  வீட்டில் அவர்கள் வாழ்விலும் புதுமைகள் மலரட்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்