நீட் தேர்வு மைய விவகாரம் - சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவு

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (13:23 IST)
நீட் தேர்வு மையம் ஒதுக்குவதில் உருவான குளறுபடிக்கு தமிழக அரசும் சிபிஎஸ்இயும் நாளை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. 
 
இந்நிலையில் மே 6-ந் தேதி நடைபெறவுள்ள நீட் தேவு எழுத தமிழகத்தில் 10 செண்டர்களே உள்ளதால், நீட் தேரிவிற்காக விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு அண்டை மாநிலத்தில் தேர்வு எழுத செண்டர் போடப்பட்டிருக்கிறது. இதனால் பல மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலே செண்டர் போட வேண்டும் என காளிமுத்து மைலவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வரும் 6 ந் தேதி தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையம் ஒதுக்குவதில் உருவான குளறுபடிக்கு தமிழக அரசும் சிபிஎஸ்இயும் நாளையே பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்