அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (10:51 IST)
புதுச்சேரியில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநிலம் அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
புதுச்சேரியில் தற்போது தமிழக பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. 
 
கடந்த 2014 - 15ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலும், 11ஆம் வகுப்பிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல் படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி கூறிய போது சிபிஎஸ்சி பாடத்திட்டம் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பில் அமலாகும் என்று தெரிவித்தார் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என்று கூறியுள்ளார்.
 
சிபிஎஸ்சி பாடத்திட்டம் இருந்தாலும் தமிழ் மொழி கண்டிப்பாக இடம்பெறும் என்றும் ஹிந்தியை விரும்புபவர்கள் மட்டும் படித்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்