கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன்: கைது செய்யப்படுவாரா?

Webdunia
புதன், 25 மே 2022 (19:12 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ப சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை செய்தது. இந்த சோதனையின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவர் கைது செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகும் போது அவரிடம்  விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்