2வது நாளாக ஜார்ஜ் வீட்டில் சிபிஐ சோதனை: சிக்கிய ஆவணங்கள் என்ன?

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (08:32 IST)
குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ ரெய்டு நடத்தியது. இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக காவல்துறை உயரதிகாரி ஜார்ஜ் உள்பட பலரது வீடுகளில் சிபிஐ ரெய்டு தொடர்கிறது.

நேற்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் 7 சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரமாக சோதனை நடத்தியதாகவும் இந்த சோதனையின் முடிவில், 2 பைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் இன்னும் கருத்து எதுவும் சொல்லவில்லை.
மேலும் நேற்று விடிய விடிய முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் சோதனை நடத்தியதோடு மட்டுமின்றி இன்றும் இரண்டாவது நாளாக சோதனை தொடர்வதால் இன்னும் பல ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்