இன வெறியாக மாறிய காவிரி விவகாரம்

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (12:06 IST)
காவிரி விவகாரத்தில் பெங்களூரில் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டர். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.


 

 
பெங்களூரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சந்தோஷ் என்பவர் ஒரு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டர். இச்செயல் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதைத்தொடர்ந்து தமிழர் என பெருமை போற்றும் அமைப்பினர் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த ஓட்டுனரை தாக்கியுள்ளனர்.
 
மேலும் அந்த ஓட்டுநரை மண்டியிடச் செய்து காவிரி தமிழ்நாட்டுக்கே என்று அடித்து செல்ல வைத்தனர். பதிலுக்கு பதில், பழிக்கு பழி என்ற செயலில் தமிழக அமைப்பினரும் இறங்கிவிட்டனர்.
 
காவிரி உரிமை கோரி நடக்கும் போராட்டத்தில் இன வெறி தூண்டப்பட்டுள்ளது. இதனால் காவிரி விவகாரம் தீவிரம் அடைந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்