'மக்களை திசை திருப்பவே காவிரி பிரச்சினை' - தமிழிசை குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (19:20 IST)
கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறத்தான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ‘’கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறத்தான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.  தமிழக எல்லையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பாஜகவும் பங்கேற்க தயாராக இருக்கிறோம். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமை குறித்து மத்திய நீர்வள அமைச்சகத்திடம் பேசி உள்ளோம்’’ என்றார்.
அடுத்த கட்டுரையில்