பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

Senthil Velan
செவ்வாய், 18 ஜூன் 2024 (18:10 IST)
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த சாதிய அடையாளமும் இருக்க கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.
 
பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகள் நடப்பதை தடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில், அரசு பள்ளிகளின் பெயர்களில் எந்த சாதிய அடையாளங்களும் இருக்க கூடாது என்றும் ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த சாதி அடையாளமும் இருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல் தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. சாதி அடையாளங்கள் இருக்க கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி தொடங்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சந்திர குழு அறிவுறுத்தி உள்ளது.
 
குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள அந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் அதே சமூகத்தினரை சேர்ந்தவரை தலைமையாசிரியராக நியமனம் செய்யக் கூடாது என்றும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டினை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ALSO READ: பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!
 
கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றியில் திலகம் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக்கூடாது என்றும் மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி சந்துரு குழு பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்