மேற்கு வங்க மாநிலத்தின் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப 25,753 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இது இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்றது
இந்த விசாரணையின் முடிவில் சட்டவிரோதமாக பணி நியமனம் செய்யப்பட்ட 25,753 ஆசிரியர்கள் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் இதுவரை பெற்ற சம்பளம் சலுகைகள் ஆகியவற்றை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது