விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் ஜெயிலில் பணிவாற்றி வந்த வார்டன் ஒருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் நல்லியக்கோடன் பகுதியில் வசித்து வருபவர் பாரதி மணிகண்டன். இவர் திண்டிவபம் சப் ஜெயிலில் வார்டனாகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை அந்த ஜெயிலின் சப்ஜெயிலர் இவரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நின்றுகொண்டே இருக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது.
சப்ஜெயிலரின் உத்தரவால் மனவேதனை அடைந்த அவர் ஒரு பிளேடால் தன் கையின் மணிக்கட்டுப் பகுதியை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் அந்த ஜெயிலில் பணியாற்றிவரும் தன்னை உள்ளிட்ட 4 பேர் மீது சாதி வேறுபாடு காட்டப்படுவதாகவும் இருக்கையில் அமரவிடாமல் நிற்க வைப்பதாகவும் பாரதி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.