நளினியை வேலூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்ற வழக்கு! நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு!

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (17:33 IST)
சிறையில் இருக்கும் நளினியை சென்னை சிறைக்கு மாற்ற சொல்லி வழக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி திடீரென நேற்று முன் தினம் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டுகளாக நளினியை சென்னையில் இருந்து வேலூர் சென்று சந்தித்து வந்தார் அவரது தாயார். இப்போது லாக்டவுன் நேரம் என்பதால் அதற்கும் சிக்கல் உண்டானது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கில் தனக்கு வயதாகி விட்ட நிலையில் நளினியை வேலூருக்கு சென்று பார்த்து வருவதில் சிரமம் இருக்கிறது. இதனால் நளினியை சென்னை சிறைக்கு மாற்ற சொல்லி சிறைத்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் அவரை சென்னை சிறைக்கு மாற்ற சொல்லி உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு வாரத்துக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்