துப்பாக்கி, அரிவாளுடன் ஆயுத பூஜை – அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (18:52 IST)
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது வீட்டில் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்து ஆயுதபூஜை கொண்டாடியதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
கோவை உக்கடத்தில் உள்ள தனது வீட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது வீட்டில் துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வைத்து ஆயுத பூஜை கொண்டாடினார். ஆயுதபூஜை கொண்டாடும் படத்தை முகநூலிலும் வெளியிட்டார்.
 
இந்நிலையில் மறுமலர்ச்சி தமிழக முஸ்ஸீம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்து இஸ்லாமிய ஜமாத்துகள், தந்தை பெரியார் திராவிட கழகம் போன்ற அமைப்பினர் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதனன்று புகார் அளித்தனர்.
 
வெளிப்படையாக இந்து தீவிரவாதத்தை ஆதரிக்கும் நபரான அர்ஜுன் சம்பத், மீண்டும் கோவையில் பதட்டத்தை ஏற்படுத்த இது போன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
 
காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சட்டரீதியாக நடவக்கையில் ஈடுபட இருப்பதாகவும், அர்ஜுன் சம்பத் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மாநகர காவல் ஆனையரிடம் மனு அளித்தனர்.
 
இதன் பேரில் அர்ஜூன் சம்பத் மீது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்