புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிப்பவர் மூக்கையா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பேருந்து ஓட்டிச்செல்லும் போது வாட்ஸ் அப்பை இயக்கியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இவரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட அரசு போக்குவரத்து கழக மேலாலர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த மக்கள், பயணிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து மூக்கையாவை, அரசு போக்குவரத்து அதிகாரி ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுபோன்று செயலில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.