வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறிய ராணுவத்தினர் !

வியாழன், 11 ஜூலை 2019 (16:49 IST)
சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அதன் மீதான மோகம் மக்களுக்கு குறையவில்லை. மெசெஜ் செய்வது போலலாமல் நேரம் போவதே தெரியாத அதன் செயல்பாடுகள் தான் இளைஞர்கள் அதில் மூழ்கியிருப்பதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அனைத்து மக்களும் உள்ளனர். குறிப்பாக நம் தேசத்தைக் காக்கும் ராணுவத்தினரும் உள்ளனர்.இந்நிலையில் அறிமுகம் இல்லாத வெளி நபர்களூடான வாட்ஸ் அபப் குழுக்களில் ராணுவத்தினர் இருந்தால் அவர்கள் வெளியேறும்படி ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து ராணுவ வீரர்கள் அனைவரும்  வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறிஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
 
முன்னதாக , பல லட்சக் கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் அலுவலக சம்பந்தமான முக்கியமான தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் ஆப் வழி பரவுவதால் அது அதனால் தீவிரவாதிகளுக்கு அது பயன்படுவதாக ராணுவத்தினரின் முகாம்கள் இருப்பதை அது கண்டறிய உதவுவதாகவும் ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது. 
 
இதனைத்தொடர்ந்து இதனை தடுக்கும் பொருட்டு ராணுவ வீரர்கள் அறிமுகமில்லாதவர்களுடன் வாட்ஸ் ஆப் குழுவில் இருக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அனைவரும்  வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்