தமிழகம் முழுவதும் நாளை அரசுப் பேருந்துகள் ஓடாது

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (14:11 IST)
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதா திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் போக்குவரத்துத் துறைக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.
 
ஆகவே நாடு முழுவதிலும் உள்ள வாகனத் துறை அமைப்புகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்நிலையில் இதனைக் கண்டித்து நாளை மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
 
ஆகவே நாளை தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப் உள்ளிட்ட பல போக்குவரத்து சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்