தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விபத்தில் பலி

ஞாயிறு, 29 ஜூலை 2018 (13:00 IST)
தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோதுங்கன் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த குலோதுங்கன் என்பவர் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். மிகச் சிறந்த கால்பந்து வீரரான இவர் கோல் அடிப்பதிலும், கோல் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதிலும் கைதேர்ந்தவர். 
ஈஸ்ட்பெங்கால் கிளப் அணி ஆசிய கிளப் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றபோது அந்த அணியில் குலோதுங்கன் இடம்பிடித்திருந்தார். 
 
தமிழக கால்பந்து அணியின் சிம்மசொப்பனமாக இருந்த குலோதுங்கன் தஞ்சை- வல்லம் இடையே ஆலக்குடி பைபாஸ் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.  இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு கால்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் என்னுடன் விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவரான குலோதுங்கன் இறந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன என பதிவிட்டிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்