இனி படிக்கட்டில் பயணம் செய்தால் மாணவர்கள் பஸ் பாஸ் கட்

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (11:37 IST)
பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாக நடக்கிறது. இதில் பல உயிரிழப்புகள் தொடர்ந்தாலும் மாணவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை.  படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.


 

மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இனி பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் மாணவர்களின் பஸ் பாஸ் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் அந்த மாணவர்களின் பேருந்து பயண அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்