மணிக்கணக்கா யார்கிட்ட பேசிட்டிருக்க..? – தங்கையை கழுத்தை நெறித்துக் கொன்ற அண்ணன்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (12:02 IST)
பழனியில் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் தங்கையை அண்ணனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் கணபதி நகரை சேர்ந்தவர் சங்கிலியம்மாள். கணவரை இழந்த இவருக்கு வேலைக்கு போகும் கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் இளைய மகளான 16 வயது சிறுமி செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் பெரியம்மா மகன் பாலமுருகன், செல்போனில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என விசாரிக்க, அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் சிறுமியை கழுத்தை நெறித்துள்ளார். இதனால் சிறுமி மயக்கமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்