ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாறும் பிராட்வே!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (13:38 IST)
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது கோயம்பேடு பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்னால் பிராட்வேயில் தான் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைத்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு வசதி வளாகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பல அடுக்கு வாகன நிறுத்தம், வணிக வளாகம் மற்றும் கடைநிலை இணைப்புகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புடன் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.
 
பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்ற வேண்டுமென பல ஆண்டுகளாக சென்னை மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தான் அது நிறைவேற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்