தமிழ் சினிமா இயக்குனர் ஹரியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமி, சிங்கம் உள்ளிட பல திரைப்படங்களை இயக்கியவர் ஹரி. இவரின் வீட்டிற்கு நேற்று இரண்டு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ஹரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் ஹரியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் கார்த்தி மற்றும் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர்தான் அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
ஒரு நிலம் தொடர்பான பிரச்சனையில் ஹரிக்கும், அவர்களுக்கும் இடையே இருந்த தகராறு காரணமாக, அவர்கள் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.