சீமானின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு வந்த தகவலை அடுத்து, காவல்துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது. மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சீமான் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, இந்த மிரட்டல் ஒரு புரளி என்று உறுதி செய்யப்பட்டது. அண்மைக் காலமாகவே, கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், அவை புரளிகள் என தெரியவருவதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.