காஞ்சிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு ... செயலிழக்க வைக்க நடவடிக்கை...

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:01 IST)
காஞ்சிபுரம் மாவட்டம்  திருப்போரூர் அருகே மானாம்பதியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாரிகள் அதை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் மாறுவேடமிட்டு தமிழ்நாட்டில் வந்துள்ளதாகவும், அவர்கள் நாச வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. கோவை மாநகரில் சந்தேகிக்கும் படியான நபர்கள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் வந்ததை  அடுத்து, கோவையில் புல்லட் புரூப் அணிந்து போலீஸார்  மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பலத்த சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதற்கிடையே , காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர்  மானாம்பதியில் அருகே வெடிகுண்டின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இந்த வெடிகுண்டுகலை பகல் 2 மணி அளவில் மானாதமி ஏரியில் பள்ளம் தோண்டி அதில் வெடிகுண்டு வெடிக்கச் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு உடன் வயர் இணைத்து 2 கிமீ தூரத்தில் இருந்து வெடிகுண்டு வெடிக்கச் செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்