காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக்க முயன்று தோல்வி அடைந்த பாகிஸ்தான் தற்போது காஷ்மீருக்காக எதையும் செய்ய தயார் என்றும் இரு நாடுகளும் அணுகுண்டுகள் வைத்திருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே போர் வந்தால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார்
இன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியிலானது என்றும் காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிபட தெரிவித்துவிட்டார். இதனால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்பட்டதாக கருதப்படுகிறது
இந்த நிலையில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் அணுகுண்டு விவகாரத்தை இம்ரான்கான் கையில் எடுத்துள்ளார். இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மக்களுக்காக ஆற்றிய உரையில், 'காஷ்மீர் மக்களுக்கு உதவ என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும், இந்திய அரசின் பிடிவாதம் போரை நோக்கி இட்டுச் செல்ல கூடும் என்றும் இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் இருப்பதால் போர் சூழ்நிலை ஏற்பட்டால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே உலக நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டியது அவசியம் என்றும் பேசினார்.