அந்த வகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிப்பார். ஆனால், இம்முறை சயன் கோலத்தில் நீண்ட நாட்கள் காட்சி அளித்த அவர் நின்ற கோலத்தில் குறைவாகவே அருள் பாலித்தார்.
குளத்தில் தண்ணீர் வடிக்கப்பட்டு அத்திவரதரின் சிலையை வைத்துவிட்டு தற்போது குழாய் மூலம் அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் விடப்படுகிறது. அதோடு குளத்தை சுற்றிலும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலம் போலீசார் கோவில் குளத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜீயர் ஒருமுறை திருட்டு பயம் காரணமாகவே அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்டதகாவும், ஆனால் இப்போது அந்த பயம் இல்லாத காரணத்தால் வெளியிலேயே அவரின் சிலையை வைக்கலாம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.